மொட்டை மாடியில் தூங்கிய வடமாநில இளைஞர் | கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த சோகம்
மொட்டை மாடியில் தூங்கிய வடமாநில இளைஞர் கீழே விழுந்து பலி
சென்னை கோடம்பாக்கத்தில் அடுக்குமாடி கட்டிடத்தின் மொட்டை மாடியில் தூங்கி கொண்டிருந்த வடமாநில இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்தார். உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த சக்திமான் என்பவர் கோடம்பாக்கம் காவல் நிலையம் எதிரே புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி கட்டிடத்தில் தங்கி பெயிண்டிங் வேலை செய்து வந்தார். இரவு மொட்டை மாடியில் தூங்கிய அவர், அடுக்குமாடி கட்டிடத்தின் பக்கவாட்டில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.
Next Story
