Child Safety|அதிகாலையில் ``அம்மா.. அம்மா’’ என கதறிய சிறுமி..அப்பாவுடைய நண்பனின் சைக்கோ முகம் அம்பலம்

அதிகாலையில் ``அம்மா.. அம்மா’’ என கதறிய சிறுமி..அப்பாவுடைய நண்பனின் சைக்கோ முகம் அம்பலம்

அதிகாலையில் ``அம்மா.. அம்மா’’ என கதறிய சிறுமி.. அம்பலமான அப்பாவுடைய நண்பனின் சைக்கோ முகம்

#childsafety #childhelpline

அரியலூரில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தந்தையின் நண்பன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.... அரியலூர் சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த இருசக்கர வாகன மெக்கானிக் ஒருவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரது கடையில் வாடிக்கையாளராக வந்து பழகிய 28 வயதான சக்தி மணிகண்டன் என்பவர், மெக்கானிக்குடன் நண்பனாக நெருங்கி பழகி இருவரும் அடிக்கடி சேர்ந்து மது அருந்தி வந்துள்ளதாக தெரிகிறது... இந்நிலையில், கடந்த 19ம் தேதி ஆயுத பூஜை கொண்டாட்டத்தின்போது, பழுதான வாகனத்தைச் சரிசெய்யச் சென்ற தந்தை, தனது நான்கு வயது மகளையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது தந்தையும், சக்தி மணிகண்டனும் போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, கடைக்கு அருகில் ஆயுத பூஜை படையல் நடந்து கொண்டிருந்த வேளையில், அருகில் இருந்த சந்து பகுதிக்குச் சிறுமியை அழைத்துச் சென்ற சக்தி மணிகண்டன், சிறுமியிடம் அத்துமீறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையே, அதிகாலையில் சிறுமி அடிவயிறு வலிப்பதாகக் கூறி அழுத நிலையில், அவரது தாய்,, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளார். பின்னர் சிறுமியிடம் விசாரித்தபோது, அப்பாவின் நண்பர்தான் தன்னைத் துன்புறுத்தியதாகக் கூறியுள்ளார். கணவனின் நண்பர்கள் மற்றும் பலரின் புகைப்படங்களைச் செல்போனில் காட்டியபோது, சக்தி மணிகண்டனைச் சிறுமி அடையாளம் காட்டியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனடியாக சக்தி மணிகண்டனை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சக்தி மணிகண்டனைக் கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மகளாக கருத வேண்டிய சிறுமியிடம் தந்தையின் நண்பனே கொடூர செயலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

X

Thanthi TV
www.thanthitv.com