Instagram | இன்ஸ்டாவில் கேட்ட பெண் குரல்... நம்பிய குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் காலி
#instagram | #crimenews | #Hosur
இன்ஸ்டாவில் கேட்ட பெண் குரல்... நம்பிய குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் காலி ஓசூரில், இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பெண் குரலில் பேசி, 100 கோடி ரூபாய் சொத்து கிடைக்கும் என ஆசை காட்டி, எலுமிச்சைப் பழ வியாபாரி குடும்பத்திடம் 25 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். குபேந்திரன் என்பவரிடம் பெண் போலப் பேசிய சிவசாரதி, தீய சக்திகளை விரட்டுவதாகக் கூறி நான்கு மாதங்களாக வீட்டில் பரிகார பூஜைகள் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில் குடும்பத்தினரிடம் இருந்து 25 சவரன் தங்க நகைகளையும், 10 லட்சம் ரூபாய் பணத்தையும் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார். மேலும்,100 கோடி ரூபாய் சொத்து ஆவணங்களுக்குப் பதிலாக வெற்றுக் காகிதங்கள் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரில் ஓசூர் நகர போலீசார், சிவசாரதியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
