கணவனுக்கு கடைசிவரை மறைக்க நினைத்து அசிங்கபட்ட பெண்.. சென்னையில் அதிர்ச்சி

x

கணவனுக்கு கடைசிவரை மறைக்க நினைத்து அசிங்கபட்ட பெண்.. சென்னையில் அதிர்ச்சி

கணவருக்கு தெரியாமல் வாங்கிய கடன் - நகை கடையில் திருட முயன்ற பெண்

சென்னை திருவொற்றியூரில் நகை கடையில், பர்தா அணிந்து வந்து மிளகாய் பொடி தூவி நகையை திருட முயன்ற பெண்ணை கடை ஊழியர்கள் மடக்கிப் பிடித்தனர். சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை மார்க்கெட் பகுதியில், தேவராஜ் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்குள் பர்தா அணிந்து வந்த பெண் ஒருவர், திடீரென ஊழியர்கள் மீது மிளகாய் பொடி தூவி, நகைகளை திருட முயன்றுள்ளார். அவரை மடக்கிப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். விசாரணையில், காலடிப்பேட்டையை சேர்ந்த ஜெய சித்ரா என்கிற அந்த பெண், கணவருக்கு தெரியாமல் வாங்கிய கடனை அடைப்பதற்காக இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்