திடீரென வெடித்து சிதறிய வெடி மருந்து.. தூக்கி வீசப்பட்டு பெண் உயிரிழப்பு - பதறவைக்கும் காட்சி

x

புதுச்சேரியில் வெடி மருந்து வெடித்து சிதறி பெண் உயிரிழப்பு

புதுச்சேரி அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடி விட்டு இருசக்கர வாகனத்தில் சென்ற போ

புதுச்சேரி கூடப்பாக்கம் அருகே காட்டு பன்றியை வேட்டையாடி விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய போது பன்றியை தாக்க வைத்திருந்த வெடி மருந்து வெடித்ததில் பழங்குடியின பெண் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இதனிடையே விபத்து குறித்து பதபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது

புதுச்சேரி, மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழங்குடி ( நரிக்குறவர்கள்) இனத்தைச் சேர்ந்தவர் அமாவாசை இவரது மனைவி ஜெரினா(52), இவர் இன்று அதிகாலை தனது மருமகன் பாண்டியனுடன்(40), தமிழகப் பகுதியான வழுதாவூரில் காட்டுப்பன்றியை வேட்டையாடியுள்ளனர். மேலும் பன்றி தாக்க வந்தால் அதன் மீது வீசுவதற்கு வெடி மருந்தை அவர்கள் எடுத்துச் சென்றனர்.

இதனிடையே பன்றியை வேட்டையாடிய விட்டு தனது இரு சக்கர வாகனத்தில் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனது வீட்டிற்கு வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்பொழுது இருசக்கர வாகனம் கூடப்பாக்கம் அருகே வந்தபோது, சாலையில் இருந்த வேக தடையின் மீது ஏறியதில் வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்து உள்ளது. இதில் பன்றியை வேட்டையாடி விட்டு மீதமிருந்த வெடி மருந்து வெடித்ததில் ஜெரினா தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மருமகன் பாண்டியன் பலத்த காயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இச்சம்பவம் குறித்து வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே விபத்து குறித்து பதபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்