திடீரென கலெக்டர் காலில் விழுந்த பெண் தூய்மை பணியாளர்கள்... கண்ணீர் மல்க சொன்ன வார்த்தை
கோவை அரசு மருத்துவமனையில், தனியார் நிறுவனத்தின் சார்பில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு சம்பளமும் மருத்துவத் தொகையும் வழங்கப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த சில பெண் தூய்மை பணியாளர்கள், திடீரென அவரது காலில் விழுந்து, கண்ணீர் மல்க முறையிட்டனர். அவர்களிடம் மாவட்ட ஆட்சியர் பவன் குமார், விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
Next Story
