சொன்ன இடத்தில் இறக்கி விடாததால் ஒற்றை ஆளாக நின்று பஸ் டிரைவரை அலறவிட்ட பெண்
தான் கூறிய இடத்தில் இறக்கி விட மறுத்த பேருந்தை பெண் ஒருவர் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள இ கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த சுதா என்பவர், சென்னையில் பணிபுரிகிறார். இந்நிலையில் தனியார் ஆம்னி பேருந்தில் ஏறி ஆவட்டி கூட்ரோடு செல்ல அவர் டிக்கெட் எடுத்துள்ளார். நடத்துனரும் ஆவட்டியில் இறக்கிடுவதாக கூறிய நிலையில், இரவு 9 மணி அளவில் ஆவட்டி தேசிய நெடுஞ்சாலையில் இறக்கி விட்டுள்ளார். இதனால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அப்பெண் பேருந்தை மறித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அரை மணி நேர போராட்டத்துக்கு பின் அப்பெண் கூறிய இடத்தில் இறக்கிவிட்டுச் சென்றனர்.
Next Story