``முருகா.. இங்க வா..’’ அழைத்ததும் பறந்துவரும் மயில்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இருமன்குளம் கிராமத்தில் வசிக்கும் பெண், ஜோடி மயில்களுக்கு தினமும் உணவிட்டு, முருகா வா... என அழைத்ததும் பறந்து வரும் காட்சி வெளியாகியுள்ளது. இருமன்குளம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி பாரதி மற்றும் அவரின் குழந்தைகள் நாள்தோறும் அவர்களது வீட்டின் அருகே உள்ள ஜோடி மயில்களுக்கு உணவு வழங்கும் காட்சி காண்போரை வியப்படையச் செய்துள்ளது.
Next Story
