வீட்டிற்குள் நுழைந்த காட்டெருமை - நடுநடுங்கிய மக்கள்.. அதிர்ச்சி வீடியோ
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள பிங்கர் போஸ்ட் பகுதியில் நுழைந்த காட்டெருமையால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர். உதகையில் சமீபகாலமாக காட்டெருமை நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், பிங்கர் போஸ்ட் பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டில் நுழைந்த காட்டெருமை, அங்கிருந்த தண்ணீரை குடித்துவிட்டு, சிறிது நேரத்திற்கு பின் அருகில் உள்ள வனத்திற்குள் நுழைந்து சென்றது. குடியிருப்பு பகுதியில் இது போன்று நுழையும் காட்டெருமைகளை வனத்துறையினர் உடனடியாக விரட்ட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
Next Story
