சினிமா பாணியில் நடந்த கல்யாணம்.. எதுவும் நடக்காதது போல் வந்து தூங்கிய சிறுமி
நீலகிரியில் 14 வயது சிறுமியை 2-வது திருமணம் செய்த இளைஞர், போக்சோவில் கைது செய்யப்பட்டார். உதகையை அடுத்த காந்தல் பகுதியை சேர்ந்த 22 வயதான புவனேஸ்வர் என்பவருக்கு திருமணமான நிலையில், குடும்பத் தகராறு காரணமாக மனைவி தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் புவனேஸ்வருக்கும் அதே பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதாலாக மாறியுள்ளது. இருவரும் கோவிலில் திருமணம் செய்து கொண்டு, அலைப்பாயுதே படத்தில் வருவது போல அவரவர் வீட்டிற்கு சென்று சகஜமாக இருந்துள்ளனர். இதனையடுத்து திருமணம் செய்த போது எடுத்த புகைப்படத்தை, சிறுமி இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியதை பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், புவனேஸ்வர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.
Next Story
