உங்கள் தொகுதியில் முதலமைச்சர் : மனுவின் நிலையை மக்கள் அறிய இணையதளம் தொடங்கப்படும் - ஸ்டாலின்

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்திற்காக பிரத்யேக இணையதளம் தொடங்கப்பட உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் : மனுவின் நிலையை மக்கள் அறிய இணையதளம் தொடங்கப்படும் - ஸ்டாலின்
Published on

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் : மனுவின் நிலையை மக்கள் அறிய இணையதளம் தொடங்கப்படும் - ஸ்டாலின்

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்திற்காக பிரத்யேக இணையதளம் தொடங்கப்பட உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பிரச்சார நிகழ்வின் போது மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை, சிறப்பு அலுவலரான ஷில்பா பிரபாகர் சதீஷிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்படைத்தார்.இந்த மனுக்களை உட்கட்டமைப்பு, சமூக சொத்துக்கள், தனிநபர் கோரிக்கை என மூன்றாக பிரித்து சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என ஆய்வு செய்யப்படும் என உறுதி அளித்துள்ளார்.இதற்காக இணையதளம் தொடங்கப்பட்டு, அதில் மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விவரத்தை அறியலாம் என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.தனிநபர் கோரிக்கைகள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, சாத்தியமானதற்கு உடனடி தீர்வு காணப்படும் என உறுதி அளித்துள்ள ஸ்டாலின்,தற்போது அரசு நிர்வாகம் மொத்த கவனத்தையும் கொரோனா மீது செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், இயன்றவரை மனுக்களுக்கு தீர்வு எட்டப்படும் என தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com