பிரபல நடிகை வெளியிட்ட வீடியோ...செம வைரலாகும் லிட்டில் கிருஷ்ணா
நடிகை பிரனிதா தனது குழந்தையுடன் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. தமிழில் உதயன், சகுனி, மாசு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரனிதா. இவர் தொழிலதிபர் நிதின் ராஜுவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தனது மகனுக்கு கிருஷ்ணர் வேடம் அணிந்து நடிகை பிரனிதா வீடியோ வெளியிட்டுள்ளார்.
