காய்கறிகளால் இப்படி ஒரு கண்காட்சியா? - ``மிஸ் பண்ணமா இப்போவே கிளம்புங்க''

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கி இருப்பதால், சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக மாவட்ட நிர்வாகம் சார்பாக ஆண்டு தோறும் கோடை விழா நடப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது இந்த ஆண்டுக்கான கோடை விழாவின் முதல் நிகழ்வாக 13 வது காய்கறி கண்காட்சி கோத்தகிரி நேரு பூங்காவில் துவங்கியது. கண்காட்சியில் குழந்தைகள், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இரண்டரை டன் காய்கறிகளால் ஆன பாரம்பரியமான ஜல்லிகட்டு காளை, பட்டாம்பூச்சி, மரகத புறா போன்றவற்றை வடிவமைக்கப்பட்டு இருந்தன. இதனை சுற்றுலா பயணிகள் ஆர்வத்தோடு கண்டு களித்தனர். மேலும் இந்த ஆண்டு முதல் முறையாக வாசனை திரவிய கண்காட்சியும் நடத்தப்படவிருக்கிறது.

X

Thanthi TV
www.thanthitv.com