திடீரென கவிழ்ந்த 30 பேருடன் சென்ற வேன்.. திருச்செந்தூருக்கு செல்லும்போது கோரம் - 10 நிலை?
நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தில் சென்டர் மீடியனில் மோதி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தென்காசி ஆலமநாயக்கன்பட்டியை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் 2 வேன்களில் திருச்செந்தூருக்கு சாமி தரிசனம் செய்ய கடந்த வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்டு சென்றுள்ளனர். அப்போது திருநெல்வேலி அருகே திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் சாலையின் குறுக்கே உள்ள சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
