Accident | CCTV Footage | மின்னல் வேகத்தில் வந்த டூவீலர் - கண் இமைக்கும் நேரத்தில் நடந்த கோர விபத்து

மின்னல் வேகத்தில் வந்த டூவீலர் - கண் இமைக்கும் நேரத்தில் நடந்த கோர விபத்து

Accident | CCTV Footage | மின்னல் வேகத்தில் வந்த டூவீலர் - கண் இமைக்கும் நேரத்தில் நடந்த கோர விபத்து | Tirupur #tirupur #accident #cctv #thanthitv காங்கேயத்தில் பைக் நேருக்கு நேர் மோதி விபத்து – 2 பேர் பலி திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில், கல்லூரி மாணவர் உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அண்ணா நகரைச் சேர்ந்த 20 வயதான பாலாஜி, தனது நண்பர்கள் இருவருடன் கோவை - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்றுள்ளார். அப்போது, எதிர் திசையில் திடீரென குறுக்கே வந்த மொபட் மீது பைக் மோதியது... இந்த விபத்தில் பைக்கை ஓட்டிச் சென்ற பாலாஜி மற்றும் மொபட்டை ஓட்டிச் சென்ற 50 வயதான சுந்தரம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த இரு இளைஞர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

X