சின்னத்துரை விவகாரத்தில் திருப்பம்... சிக்கிய இன்னொருவன்
மாணவன் சின்னத்துரை மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சின்னத்துரை. இவரை இன்ஸ்டாகிராம் மூலம் நண்பர்கள் போல பழகி தனியாக வர வைத்து 5 பேர் கொண்ட கும்பல் வழிப்பறியில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் 2 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் பரமேஷ் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலை மறைவாக இருக்கும் நபர்களை தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்
Next Story
