Ranipet | Singapore | கொடுமையிலும் கொடுமை - தமிழக இளைஞருக்கு சிங்கப்பூரில் நேர்ந்த விபரீதம்

கொடுமையிலும் கொடுமை - தமிழக இளைஞருக்கு சிங்கப்பூரில் நேர்ந்த விபரீதம்

Ranipet | Singapore | கொடுமையிலும் கொடுமை - தமிழக இளைஞருக்கு சிங்கப்பூரில் நேர்ந்த விபரீதம்

#ranipet #singapore #thanthitv

2 குழந்தைகளுடன் தவிக்கும் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க கோரிக்கை சிங்கப்பூர் துறைமுகத்தில் ஏற்பட்ட விபத்தில் கன்டெய்னருடன் கடலில் விழுந்து படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராணிப்பேட்டை இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் நரசிங்கபுரத்தைச் சேர்ந்த 35 வயதான வினோத், சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த 22-ஆம் தேதி துவாஸ் துறைமுகத்தில் பணியில் இருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்த அவரது உடல் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டுச் சொந்த ஊரான நரசிங்கபுரத்திற்குக் எடுத்துச் செல்லப்படவுள்ளது. கணவனை இழந்து வாடும் அவரது மனைவிக்கும், அவரது இரண்டு குழந்தைகளுக்கும் தமிழ்நாடு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என உறவினர்கள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com