கார் மீது மோதி நொறுங்கி சிதைந்த லாரி - அதிர்ச்சி காட்சி

x

சரக்கு லாரி, கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இருவர் படுகாயம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் புறவழிச் சாலையில் சரக்கு லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர். எலவனாசூர்கோட்டையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த சரக்கு லாரியின் மீது எதிரே அதிவேகமாக வந்த கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த திருவண்ணாமலையை சேர்ந்த இருவர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து உடனடியாக அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்