மின்சார வசதி கூட இல்லாமல் 10ம் வகுப்பில் 352 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த பழங்குடியின மாணவி
மின்வசதி இன்றி, தெரு விளக்கு வெளிச்சத்தில் படித்து, பழங்குடியினத்தை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி சாதனை படைத்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வீரா நகர் பகுதியை சேர்ந்தவர்கள் சடையப்பன், சித்ரா தம்பதி. பழங்குடியினத்தை சேர்ந்த இவர்கள் மின்சார வசதிகள் கூட இல்லாத நிலையில், குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர்.
இவர்களது மகள் சந்தியா, தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்து வந்த நிலையில், 10ம் வகுப்பில் 352 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். ஆனால் சாதி சான்றிதழ் கிடைக்காமல் அவதிப்பட்டு வரும் சந்தியா, தனது மேற்படிப்பிற்காக அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
Next Story
