Tiruvannamalai | அலறியடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடிவந்த மக்கள் - தி.மலையில் பரபரப்பு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கோட்டை வீதி பகுதியில், நள்ளிரவில் டிரான்ஸ்பார்மர் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. டிரான்பார்மரிலிருந்து பரவிய தீ அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் மற்றும் 10-க்கும் மேற்பட்ட வீடுகளின் மின் மீட்டர்களில் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறினர். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்துக் கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில் ஏராளமான மின்சாதனப் பொருட்கள் சேதமடைந்ததால் அப்பகுதி மக்கள் வேதனைக்குள்ளாகியுள்ளனர்.
