ஆட்சியர் அலுவலகத்தில் பெண் காவலர் செய்த நெகிழ்ச்சி செயல் - வைரல் வீடியோ

x

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு உதவி செய்த பெண் காவலரின் செயல் அனைவரின் பாராட்டையும் பெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் பைரவி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறைக்கு வந்துள்ளார். அப்போது கால் நரம்பு பிடித்து இழுத்ததால் கீழே விழச் சென்ற பைரவியை பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் சந்தியா தாங்கிப் பிடித்து, அமர வைத்து முதலுதவி செய்துள்ளார். காவலர் சந்தியாவின் செயலை வெகுவாக பாரட்டிய பொது மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்யும் பணியாளர்களுக்கு ஊதியம் மட்டும் செல்கிறது ஆனால் பணியாளர்கள் வேலையில் இருப்பதில்லை என குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்