தமிழகத்தில் மொத்தம் 12 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் லிஸ்ட் ரிலீஸ் - TVK எந்த லிஸ்ட்ல இருக்கு?

x

தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அரசிதழில் வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் மொத்தம் 12 அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பட்டியலில், ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திமுக, அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. சமீபத்தில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் மாநில தேர்தல் ஆணையத்தின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இவை தவிர்த்து, தமிழகத்தில் 295 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றி கழகமும் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்