Thiruttani | நின்று கொண்டிருந்த லாரியில் மோதி நசுங்கிய டிப்பர் லாரி-கண்ணிமைக்கும் நொடியில் பயங்கரம்
திருத்தணி அருகே சாலையோரம் நின்ற கண்டெய்னர் லாரி மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த டிப்பர் லாரியின் ஓட்டுனர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். திருவள்ளூர் மாவட்டம், பொன்பாடி சோதனை சாவடி அருகே சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக கண்டெய்னர் லாரி ஒன்று, நின்று கொண்டு இருந்தது. இந்த நிலையில், அந்த வழியாக கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அருள் என்பவர் ஆந்திராவில் இருந்து திருத்தணி நோக்கி கிராவல் மண்ணுடன் அசுரவேகத்தில் ஓட்டி வந்த டிப்பர் லாரி, கண்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், டிப்பர் லாரியின் முன் பகுதி அப்பளம் போல நொறுங்கிய நிலையில், இடிபாடுகளில் சிக்கிய ஓட்டுநர் உயிருக்குப் போராடினார். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
