வாய்க்காலில் சடலமாக கிடந்த பிஞ்சு குழந்தை - மொத்த நம்பிக்கையும் உடைந்து கதறிய பெற்றோர்
மாயமான சிறுவன் சடலமாக மீட்பு - கதறி அழுத பெற்றோர்
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே காணாமல் போன 7 வயது சிறுவன் வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அயனாபுரம் பகுதியை சேர்ந்த வீரமணி என்பவரது 7 வயது மகன் தர்ஷாந்த், ஒன்றாம்வகுப்பு படித்து வந்த நிலையில், காணமால் போனதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் பல இடங்களிலும் தேடி கிடைக்காத சிறுவன் தர்ஷாந்த் காட்டுவாரி வடிகால் வாய்க்காலில் சடலமாக கிடைப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதறி அழுதனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிறுவனின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
