ரிஜிஸ்டர் ஆபீஸில் திடீர் சோதனை - அதிகாரிகளுக்கு காத்திருந்த பெரிய ஷாக்

விருதாச்சலம் பதிவுத்துறை அலுவலகத்தில் கணக்கில் வராத 8 லட்சத்தி 10 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், சப் ரிஜிஸ்டர் உட்பட 5 பேர் மீது வழக்கப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பதிவுத்துறை அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர், பத்திர பதிவு செய்ய வந்த மக்களிடம் லஞ்சம் பெற்றதை கண்டுபிடித்து பணத்தை பறிமுதல் செய்தனர். சப் ரிஜிஸ்டர் சங்கீதா, தொழிலதிபர் அபிதா குமார் உட்பட ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில், 5 பேரும் தலைமறைவாகியுள்ளதால், அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com