Weather | Chennai | ஒரே மணிநேரத்தில் சென்னையில் நடந்த திடீர் மாற்றம்... திக்குமுக்காடிப்போன மக்கள்

ஒரே மணிநேரத்தில் சென்னையில் நடந்த திடீர் மாற்றம்... திக்குமுக்காடிப்போன மக்கள்

#chennai | #rainfall | #weather ஒரே மணிநேரத்தில் சென்னையில் நடந்த திடீர் மாற்றம்... திக்குமுக்காடிப்போன மக்கள் சென்னையில் திடீர் வானிலை மாற்றத்தால், தரமணி மற்றும் டைடல் பார்க் பகுதிகளில் பலத்த தரைக்காற்று வீசியது...இதன் வேகம் காரணமாக, சாலையில் இருந்த போக்குவரத்து காவல்துறை நிழற்குடை திடீரெனச் சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தென் சென்னை பகுதிகளான தரமணி, வேளச்சேரி, அடையார் மற்றும் கிண்டியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. இந்த மழையினால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வெப்பம் தணிந்தாலும், பலத்த காற்றால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

X

Thanthi TV
www.thanthitv.com