திடீரென வீசிய சூறைக்காற்று.. 3 மணி நேரம் இடி,மின்னலுடன் வெளுத்து வாங்கிய கனமழை

x

நாகையில் 3 மணி நேரமாக வெளுத்து வாங்கிய கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

மத்திய கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 3 மணி நேரமாக சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. கடலோர பகுதிகளில் பெய்த மழையால் வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்