திடீரென வீட்டிலிருந்த ஃபிரிட்ஜ் தீப்பிடித்ததால் பரபரப்பு
திருச்சி மாவட்டம் முசிறி அருகே வீட்டிலிருந்த பிரிட்ஜ் தீப்பிடித்ததால் ஒரு லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. ஏலூர்பட்டி கிராமத்தை சேர்ந்த திருவரங்கசெல்வன் என்பவரது வீட்டில் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது. உடனே திருவரங்கசெல்வன் வீட்டில் இருந்த தனது தாய் மற்றும் பாட்டியை வெளியே அனுப்பி வைத்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் அதற்குள் சுமார் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.
Next Story
