அரசுப்பேருந்தில் தீடீர் `தீ' விபத்து - பயணிகளின் நிலை?

x

தாராபுரம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூரிலிருந்து பழனி நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப்பேருந்து தாராபுரம் அருகே சென்றபோது, பேருந்தின் முன்புறத்தில் உள்ள மோட்டாரில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. அரசு பேருந்து முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால் பேருந்திலிருந்த பயணிகள் உடனடியாக கீழே இறங்கினர். இது குறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்