செல்போன் கடையில் திடீரென பற்றிய தீ.. கருகி சாம்பலான 6 லட்சம் - சென்னையில் அதிர்ச்சி
சென்னை, ஆதம்பாக்கத்தில் செயல்பட்டு வந்த தனியாருக்கு சொந்தமான செல்போன் கடையில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், சுமார் 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமானது. வேளச்சேரி பகுதியில் வசித்து வருபவர் கலில் ரகுமான். இவருக்கு சொந்தமான செல்போன் பழுதுபார்க்கும் கடை ஆதம்பாக்கத்தில் அமைந்துள்ள நிலையில், திடீரென தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story
