TNPSC Group 1 Exam Result | குரூப் 1-ல் தமிழகத்திலே முதலிடம் - விவசாயி மகள் தரமான சம்பவம்
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில், மாநில அளவில் முதலிடம் பிடித்த கடலூர் மாணவிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.கடலூர் மாவட்டம், வாழைக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கலைச்செல்வன்-மாலதி தம்பதியரின் மகள் கதிர் செல்வி, டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று, தமிழகத்தில் முதலிடம் பிடித்துள்ளார். தனது சொந்த கிராமத்திற்கு வருகை தந்த அவருக்கு, கிராம மக்கள் ஆரத்தி எடுத்து, மேள தாளத்துடன் உற்சாகமாக வரவேற்பளித்தனர். மாணவிக்கு அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர் செல்வம், அதிமுக எம்எல்ஏ அருண்மொழித் தேவன் மற்றும் சமூக ஆர்வலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story
