பஸ் மீது வேகமாக மோதிய லாரி... 13 பயணிகள் காயம்... புதுகையில் அதிர்ச்சி

x

புதுக்கோட்டை மாவட்டத்தில் நின்று கொண்டிருந்த பேருந்து மீது லாரி மோதியதில் 13 பேர் காயமடைந்தனர்.

கறம்பக்குடியிலிருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற தனியார் பேருந்து முருங்கக்கொல்லை பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பள்ளி மாணவர்கள் உட்பட 13 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து மழையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்