Nilgiris | Elephant | ஒரு ஊரையே பயத்தில் உறைய வைத்த ஒரே ஒரு யானை

ஒரு ஊரையே பயத்தில் உறைய வைத்த ஒரே ஒரு யானை

Nilgiris | Elephant | ஒரு ஊரையே பயத்தில் உறைய வைத்த ஒரே ஒரு யானை

கூடலூரில் பட்டப்பகலில் உலா வந்த காட்டு யானை -அச்சத்தில் மக்கள் ஓட்டம் நீலகிரி மாவட்டம் கூடலூர் நகரின் மார்த்தோமா நகர் குடியிருப்பு பகுதியில், பட்டப்பகலில் ஒற்றை காட்டு யானை உலா வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. யானையை கண்ட பொதுமக்கள் வீடுகளுக்குள்ளும், மாடிகளிலும் தஞ்சமடைந்தனர். யானை வருவதை அறிந்த வனத்துறையினரும் பொதுமக்களும் எதிரே வந்தவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். நீண்ட நேரம் குடியிருப்பு பகுதியில் நடமாடிய யானையை, வனத்துறையினர் பட்டாசு வெடித்தும் கூச்சலிட்டும் விரட்டினர். யானை மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் வராமல் அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

X

Thanthi TV
www.thanthitv.com