சொந்த ஊருக்கு சென்று திரும்பியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் தங்க நகை கொள்ளை
சென்னையை அடுத்த மறைமலைநகர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் தங்க நகை, வெள்ளிப் பொருட்கள் மற்றும் மூன்று லட்ச ரூபாய் ரொக்கம் திருடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மறைமலைநகர் சோதனை சாவடி அருகே திருக்கச்சூர் பகுதியில் வசித்து வரும் முருகையன் ,சொந்த ஊரான கோயம்புத்தூருக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த நகை , பணம் திருடப்பட்டது தெரியவந்துள்ளது. இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
