மதுபோதையில் பைக் விபத்து - மாணவி பலியான அதிர்ச்சி காட்சி!
தென்காசி அருகே, இளைஞரின் மதுபோதையால் கட்டுப்பாட்டை இழந்த பைக் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
வல்லம் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவியை காதலித்து வந்த ரமேஷ் என்பவர், சம்பவத்தன்று மாணவியை பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார். அவர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படும் நிலையில், பைக் விபத்தில் சிக்கி, சாலையில் இருவரும் சரிந்து விழும் காட்சி வெளியாகியுள்ளது. மாணவி உயிரிழந்த நிலையில், இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Next Story
