சென்னையில் குழந்தையுடன் நடந்து சென்ற தாய்க்கு நேர்ந்த பேரதிர்ச்சி
சென்னை தாம்பரம் அருகே சாலையின் குறுக்கே மின்கம்பி அறுந்து விழுந்ததில் பெண் ஒருவர் காயம் அடைந்தார்.
மாடம்பாக்கம் சுதர்சன் நகரில், உயர் அழுத்த மின் கம்பி அறுந்து, பிரதான சாலையின் குறுக்கே விழுந்தது. அப்போது அந்த வழியாக குழந்தையுடன் சென்ற விஜயா என்பவரின் தோள்பட்டையில் மின்கம்பி பட்டதால் தீக்காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். சுமார் அரை மணி நேரத்திற்குப் பிறகு, அறுந்து கிடைந்த மின் கம்பியை, மின்சார ஊழியர்கள் சரிசெய்தனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாடம்பாக்கம் பகுதியில் தொடர்ந்து இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதால் உயிரிழப்பு ஏற்படும் முன் மின்வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story