சீரியஸாக மனு வாங்கிய ஆட்சியர்.. குறட்டை விட்டு தூங்கிய அதிகாரிகள்.. வைரலாகும் வீடியோ
ராமநாதபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சியர் மனுக்களை வாங்கிக்கொண்டு இருந்த வேளையில், அருகில் இருந்த அரசு அதிகாரிகள் தூங்கி வழிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நேரமாக காத்திருந்த பொதுமக்கள், மாவட்ட ஆட்சியரிடம் தங்களது மனுக்களை வழங்கிய நிலையில், ஆட்சியரும் சீரியஸாக மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதனிடையே, கூட்டரங்கில் அமர்ந்து இருந்த துறை சார்ந்த அரசு அதிகாரிகள் பலரும் தங்களது இருக்கைகளில் அமர்ந்தவாறே குறட்டை விட்டுத் தூங்கினர்.
இதைப் பார்த்த பொதுமக்கள் பலரும், "தூங்கி வழியும் இந்த அரசு அதிகாரிகளால், தங்களது குறைகள் எப்படி சரிசெய்யப்படுமோ?" எனக் கவலையுடன் புலம்பி சென்றனர். இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
Next Story
