வானில் தெரியப்போகும் அதிசயம் - பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க மக்களே
இந்தியாவின் மேல்பகுதியில் உலா வரும், சர்வதேச விண்வெளி மையத்தை வரும் 12ஆம் தேதி வரை பொதுமக்கள் எளிதாக பார்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா (Shubhanshu Shukla) சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்று சரித்திர சாதனை படைத்துள்ளார். இந்த சூழலில், இதனை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இரவு 8 மணி முதல் 8.06 மணி வரை சென்னை, திருச்சி, மதுரை, பெங்களூரு, ஹைதராபாத், விசாகப்பட்டினம் உள்ளிட்ட தென் மாநில பகுதிகளில் எளிதில் மக்கள் பார்வையிட முடியும் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமின்றி பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய பகுதிகளிலும் சர்வதேச விண்வெளி மையம் தெரியும் என தெரியவருகிறது
Next Story
