ஒரே நேரத்தில் 14 பேரை துரத்தி, துரத்தி கடித்துக் குதறிய வெறிநாய்

x

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மஞ்சக்கொள்ளை கிராமத்தில், ஒரே நேரத்தில் 14 பேரை வெறிநாய் துரத்தி, துரத்திக் கடித்துக் குதறிய சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அந்த கிராமத்தில் வீட்டு வாசலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவர்களை அந்த வழியாக சென்ற வெறிநாய் திடீரென பாய்ந்து கடிக்கத் தொடங்கியது. அருகில் இருந்தவர்கள் தப்பி ஓடவும், அவர்களை அந்த வெறிநாய் துரத்தி துரத்திக் கடித்துக் குதறியது. இதில், 2 பெண்கள் உட்பட 14 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த 14 பேரும், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்