ஓடும் பஸ்ஸில் பெண்ணிடம் அசிங்கம் செய்த சித்த மருத்துவர் - பாதியிலேயே நிறுத்தி அலறவிட்ட போலீஸ்

x

ஓடும் பேருந்தில் பெண்ணிடம் சில்மிஷம் - சித்த மருத்துவர் கைது

திருவள்ளூரில் ஓடும் பேருந்தில் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக சித்த மருத்துவர் கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீபெரும்புதூர் சென்ற அரசு பேருந்தில் பயணித்த ஒரு பெண்ணிற்கு, சக பயணி ஒருவர் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இதனால், அவர் கூச்சலிட்ட நிலையில், பேருந்து பாதி வழியில் நிறுத்தப்பட்டு அந்நபர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். விசாரணையில், அவர் ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த சித்த மருத்துவரான மதி என தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்