கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை பெற்றவர்... மூச்சுத் திணறலே உயிரிழப்புக்கு காரணம்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இன்று உயிரிழந்து உள்ளார்.
கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை பெற்றவர்... மூச்சுத் திணறலே உயிரிழப்புக்கு காரணம்
Published on

கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை பெற்றவர்... மூச்சுத் திணறலே உயிரிழப்புக்கு காரணம்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இன்று உயிரிழந்து உள்ளார்.திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியை சேர்ந்த 40 வயதான அந்த நபர் , மே 8 ஆம் தேதி முதல் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக அவருக்கு கருப்பு பூஞ்சை நோய்க்கான தலைவலி, கண்வலி உள்ளிட்ட அறிகுறிகள் தெரிந்துள்ளது. உடனே அவரை கருப்பு பூஞ்சைக்கு சிகிச்சை அளிக்கும் வார்டுக்கு மாற்றி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை அவர் உயிர் பிரிந்துள்ளது. இதனிடையே, சுவாச சிக்கல் காரணமாகவே அவர் உயிரிழந்து உள்ளதாக அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் விளக்கம் அளித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com