இன்று வெளிநாடு செல்ல இருந்த நபர்... நேற்று லாரி மோதி பலி
குமரி மாவட்டம் குழித்துறை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற நபர், லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருத்துவபுரம் பகுதியை சேர்ந்த முரளி என்பவர் இன்று வெளிநாடு செல்ல இருந்த நிலையில், நேற்றிரவு குழந்தைகளுக்கு பிரியாணி வாங்குவதற்காக குழித்துறை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது கேரளாவுக்கு கனிமம் ஏற்றி சென்ற லாரி மோதியதில், முரளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் உறவினர்கள் உடலை எடுக்க விடாமல் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Next Story
