ரத்த வெள்ளத்தில் சிகிச்சைக்காக வந்தவர்.. ஆரம்ப சுகாதார நிலையத்தில் காத்திருந்த ஷாக்

x

உதகை அருகே இத்தலார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் படுகாயமடைந்த நபர் சிகிச்சை பெற வந்த நிலையில், ஆரம்ப சுகாதார நிலையம் வெறிச்சோடி காணப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

நீலகிரி மாவட்டம், உதகை அருகே இத்தலார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, ரத்த காயங்களுடன் இருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த நபரை, சிகிச்சைக்காக இத்தலார் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒருவர் அழைத்து வந்தார்.

அப்போது, ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் என யாரும் இல்லாததால், அதிர்ச்சியடைந்த இருவரும், இது குறித்து வீடியோ எடுத்தனர்.

அப்போது, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அருகில் வசிக்கும் செவிலியர், அங்கு வந்து ஞாயிற்றுக் கிழமையன்று மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை காரணமாக யாரும் இல்லை எனத் தெரிவித்தார்.

இது குறித்து, மாவட்ட ஆரம்ப சுகாதார துறையிடம் விளக்கம் கேட்ட போது, ஞாயிறன்று பொது விடுமுறை என்பதால் மருத்துவர்கள் யாரும் இல்லை எனவும் அவசர சிகிச்சைக்கு 2 செவிலியர்கள் மட்டும் இருந்த நிலையில், மற்றொரு செவிலியர் பணி மாற்றம் செய்ய வர தாமதம் ஆனதாகவும் தெரிவிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்