ஊட்டி மேட்டுப்பாளையம் பகுதியில் டூரிஸ்ட்களுக்கு காத்திருக்கும் செம சர்ப்ரைஸ்
மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் அணை நீர்த்தேக்க பகுதியில் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்திற்காக வனத்துறை சார்பில் ஏற்படுத்தப்பட்ட சூழல் சுற்றுலாவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
மேலும் மலைவாழ் மக்கள் மகளிர் சுய உதவிக்குழு மூலம் தயாரிக்கப்பட்ட உணவுகளும் சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படுகிறது. தற்போது தொடர் விடுமுறை என்பதால் ஏராளமான வெளியூர் மக்கள் இந்த சூழல் சுற்றுலாவில் கலந்து கொண்டு இயற்கையை ரசித்தனர்.
சூழல் சுற்றுலாவில் கிடைக்கும் வருமானம் அனைத்தும் பழங்குடி இன மக்களின் கல்வி மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பயன்படுத்தப்படும் என்பதும் குறிப்பிட தக்கது.
Next Story
