நடுவழியில் இறக்கிவிட்டு மழையில் நனைய வைத்த ரயில் - கொட்டும் மழையில் கொதித்த பயணிகள்
செங்கல்பட்டில் இருந்து அரக்கோணம் செல்லும் மின்சார ரயில் பாதியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் மறியலில் ஈடுபட்டனர். செங்கல்பட்டிலிருந்து அரக்கோணம் நோக்கி மின்சார ரயில் பயணிகளுடன் சென்றுள்ளது. அப்போது மும்பையில் இருந்து நாகர்கோவில் நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் வருவதையொட்டி, செங்கல்பட்டு அடுத்த பாலூர் ரயில் நிலையத்தில் அரக்கோணம் மின்சார ரயில் நிறுத்தப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் ஆகியும் அரக்கோணம் ரயில் இயக்கப்படாததால் ஆத்திரமடைந்த மக்கள், தண்டவாளத்தின் முன்பு மறியலில் ஈடுபட்டனர். மேலும் இது போன்ற சம்பவம் தொடர்ச்சியாக நடைபெறுவதாக மக்கள் குற்றமும் சாட்டியுள்ளனர்.
Next Story
