இதயத்தில் இறங்கிய ஊசி.. தெரியாமலேயே இருந்த மாணவி-கடைசி நொடியில் காப்பாற்றிய கடவுள்
இதயத்தில் இருந்த ஊசியை அகற்றி பெண்ணை காப்பாற்றிய மருத்துவர்கள்
வீட்டில் தவறி விழுந்த பெண்ணின் இதயத்தில் இறங்கிய தையல் ஊசியை, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி அவரது உயிரை காப்பாற்றினர். நாகப்பட்டினம் மாவட்டம் மீனம்பநல்லூரை புவனேஸ்வரி என்ற இளம்பெண், தன்னுடைய வீட்டில் பரணியில் இருந்த பொருட்களை எடுக்கும்போது தவறி விழுந்ததில், நெஞ்சில் துணி தைக்கும் ஊசி இறங்கியது. ஆரம்பத்தில் கவனிக்காமல் இருந்த அவருக்கு மூச்சு திணறல் மற்றும் வலி ஏற்பட்ட நிலையில், CT ஸ்கேன் மூலம் ஊசி இதயத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இரு நாட்களுக்கு பிறகு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அவசர அறுவை சிகிச்சை செய்து ஊசியை பாதுகாப்பாக அகற்றி, அவரது உயிரை அரசு மருத்துவர்கள் காப்பாற்றினர்.
Next Story
