கவுன்சிலரின் சகோதரரை ஓட ஓட வெட்டிய மர்ம கும்பல்... சென்னையில் அதிர்ச்சி

x

மணலியில் திமுக கவுன்சிலரின் சகோதரரை மர்ம நபர்கள் ஓடஓட வெட்டிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மணலியில் திமுக கவுன்சிலரின் சகோதரர் செல்வராஜ் என்பவர் மார்கெட் பகுதியில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு பழங்கள் வாங்கிக் கொண்டிருந்தார். அங்கு வந்த மர்ம நபர்கள் அரிவாளால் செல்வராஜை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர். இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்