

ஓசூர் அருகேயுள்ள ஒன்னல்வாடி கிராமத்தை சேர்ந்த ஆசிரியர் எட்வின் பிரியனும், காரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஆசிரியை மோனிகாவும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு மோனிகாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து இருவரும் வீட்டை விட்டு வெளியேறி ஓசூரில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் தலைமையில் கலப்பு திருமணம் செய்து கொண்டனர்.
இதனையடுத்து இருவரின் உயிருக்கும் ஆபத்து உள்ளதாக கூறி திருமண ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு ஓசூர் காவல்துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர்.