மனைவிக்கு TVK நிர்வாகி அனுப்பிய மெசேஜ் - கத்தியால்ஆத்திரம் தீர்த்த BJP பிரமுகர்
சென்னையில் தவெக நிர்வாகியை ஆடைகளை கிழித்து பாஜக நிர்வாகி தாக்கியதாக அதிர்ச்சி புகார் எழுந்துள்ளது.
புளியந்தோப்பு சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த தவெக நிர்வாகி சூரியகுமார், தனது நண்பரும், பாஜக பிரமுகருமான விக்னேஷ்வரன் கடந்த 25ஆம் தேதி ஈசிஆரில் உள்ள ரிசார்ட்டிற்கு சென்றுள்ளனர்.
இவர்களுடன் பெண் ஒருவரையும் அழைத்து சென்றதாக கூறப்படும் நிலையில், விக்னேஷ்வரன் அந்த பெண்ணுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை அவரது மனைவிக்கு சூர்யகுமார் அனுப்பியதாகவும், இதனை பார்த்துவிட்டு மனைவி விக்னேஷ்வரனை பிரிந்து சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலில் கீழ்ப்பாக்கம் நேரு பார்க்கில் அமர்ந்து அழுதுக்கொண்டிருந்த விக்னேஷ்வரன், சூர்யகுமாரை நேரில் வரவழைத்து ஆடையை களைத்து கத்தியால் தாக்கிவிட்டு தப்பியதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து சூர்யகுமார் அளித்த புகாரில் தலைமறைவான விக்னேஷ்வரனை போலீசார் தேடி வருகின்றனர்.
