பெற்ற தாய், தந்தையே செய்த இரக்கமில்லாத செயல் - பிறந்து 9 நாளே ஆன குழந்தைக்கு நேர்ந்த அதிர்ச்சி

x

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே பிறந்து 9 நாள்களேயான பெண் குழந்தையை பெற்றோர் விற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... ரெட்டிபட்டியைச் சேர்ந்த சந்தோஷ் சிவகாமி தம்பதி தறி தொழில் செய்து வரும் நிலையில், சிவகாமிக்கு கடந்த 9ம் தேதி ஆண் குழந்தை பிறந்து இறந்து விட்டதாக விட்டதாக மருத்துவ அறிக்கை ஒன்றை கேட்பவர்களிடம் காண்பித்து வந்துள்ளனர். ஆனால் அவர்கள் தங்களுக்கு பிறந்த 2வது பெண் குழந்தையை 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு சட்ட விரோதமாக தேவராஜ் என்பவர் மூலம் ரஞ்சித் என்பவருக்கு கடந்த 14ம் தேதி விற்றது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது... இதையடுத்து காவல்துறையினர்

சந்தோஷ், சிவகாமி, தேவராஜ், ரஞ்சித் ஆகியோர் மீது வழக்கு பதிந்து கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்